வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்கள் கேடு விளைவிப்பவை. ஆனால் இவற்றை ஆரோக்கியமான இயற்கை உணவுகளை கொண்டு நீக்க முடியும்.
- கிராம்பு இரண்டை தினசரி மென்று தின்று வர குடற்புழுக்களை அழிக்கும்.
- காலை தினமும் வெறும் வயிற்றில் பச்சை கேரட்டை கடித்து சாப்பிட்டு வர குடற்புழு நீங்கும்.
- ஒரு கப் புதினா சாற்றுடன், எலுமிச்சை சாறு கறுப்பு உப்பு கலந்து சாப்பிட்டு வர குடற்புழு பிரச்சினை நீங்கும்.
- வெதுவெதுப்பான பாலுடன் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன் கலந்து குடித்தால் குடற்புழுக்கள் மலத்தில் வெளியேறிவிடும்.
- தினசரி ஒரு பல் பூண்டை மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் குடற்புழுக்கள் அழியும்.
- எலுமிச்சை விதைகளை பொடியாக்கி நீருடன் கலந்து பருக குடற்புழு நீங்கும்.