விஜய்யை பார்த்து லியோ படத்தை பற்றி ஒரு கேள்வி கேட்கவேண்டும் என தன் ஆசையை கூறியுள்ளார் வருண் சக்ரவர்த்தி.
தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி கொல்கத்தா அணிக்காக ஐ.பி எல் போட்டியில் ஆடி வருகின்றார். மேலும் இந்திய அணிக்காகவும் ஆடியுள்ள வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராவார். விஜய்யின் முகத்தை வருண் சக்கரவர்த்தி தன் உடம்பில் பச்சை குத்தியுள்ளார். அந்த அளவிற்கு விஜய்யின் தீவிர ரசிகராக இருக்கும் வருண், விஜய்யை பார்த்தல் லியோ திரைப்படம் LCU வில் உருவாகின்றதா ? இல்லை தனி படமா ? என்ற கேள்வியை கேட்கவேண்டும் என தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.