விஜய் ஆண்டனியின் மிரட்டலான நடிப்பில் “கொலை” – திரைப்பட விமர்சனம்!
டமாரம் ரேட்டிங்: “கொலை”⭐⭐⭐⭐ | 4/5
நடிப்பு: விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா, முரளி ஷர்மா, சித்தார்த் சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம், சம்கித் போரா
தயாரிப்பு: இன்பினிட்டி பிலிம்.வெண்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ்
இசை: கிரீஷ் கோபாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவு: சிவகுமார்
எடிட்டிங்: ஆர்.கே.செல்வா
இயக்கம்: பாலாஜி கே குமார்
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, நாசர், ரேகா ( D’One)
பிரபல பாடகியாக இருப்பவர் மீனாட்சி சவுத்ரி இவர் கொலை செய்யப்படுகிறார், இந்த கொலையில் இருந்து படம் உருவாகிறது, அந்த கொலையாளிகளை பிடிப்பதற்காக புதிதாக காவல் துறையில் பணியில் சேர்ந்த கதாநாயகி ரித்திகா சிங்கிடம் அந்த கேஸ் ஒப்படைக்கப்படுகிறது, ரித்திகா சிங்கால் முடியாமல் போக! துப்பறிவாளராக வரும் கதாநாகயன் விஜய் ஆன்டணி இந்த வழக்கை கையில் எடுக்கிறார்!
கொலையான நபரே பேசுவது, மாடலிங் உலகில் என்னென்ன நடக்கிறது போன்ற காட்சிகளை ஹாலிவுட் தரத்தில் கொடுத்த இயக்குனர் பாலாஜி K குமாருக்கு கைதட்டல்!
படம் ஒரு ஹாலிவுட் தரம் போல் செல்வதற்கு சிவகுமாரின் ஒளிப்பதிவு அபாரம்!
இந்த படத்தில் கொலைகாரனை கண்டுபிடிக்க கிளைமாக்ஸ் வரை நம்மை சஸ்பென்ஸோடு அழைத்து செல்லும் திரைக்கதைக்கு ஒரு பெரிய சல்யூட் இயக்குனருக்கு இருக்கையில் இருப்பவர்களை இருக்கையின் நுனிக்கு வரவைக்கிறது.
படத்தில் இருக்கும் அணைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கான நடிப்பை எவ்வித சமரசமும் இன்றி சிறப்பாக நடித்து கொடுத்திருப்பது பெரிய பிளஸ்.
இது போல படங்களுக்கு பின்னணி இசை தான் மிகவும் முக்கியம். அதற்கு ஏற்ப கிரீஷ் கோபாலகிருஷ்ணன் படத்தோட ஒன்றி போக வைக்கிறார்.
ரிப்பீட் காட்சிகள் நிறைய இருந்தாலும் எடிட்டிங்கில் கொஞ்சம் கூட பிசிறாகமல் எடிட் செய்திருக்கிறார். எடிட்டர் ஆர்.கே.செல்வா
சின்ன சின்ன பிழை இருந்தாலும் இந்த “கொலை” ஹாலிவுட் தரம்.
#Damaaram | #Kolai | #Vijayantony | #Tamilcinema | #Review