மத்தகம் – வெப் தொடர்
வெளியீடு : HOTSTAR
டமாரம் ரேட்டிங் – 2.75/5
அதர்வா DCP ஆகவும் மணிகண்டன் ரவுடியாகவும் நடித்திருக்கும் இந்த சீரீஸ் HOTSTAR OTT தளத்தில் நேற்று வெளியானது
ரவுடி படாளம் சேகர் (மணிகண்டன்) சென்னையின் முக்கிய தாதா A + ரேங்க். இவர் ஆளுங்கட்சி அமைச்சர் (இளவரசு) க்கு நெருக்கமானவர். சென்னையில் ஏகப்பட்ட கொலை, பஞ்சாயத்து என்று செய்து மும்பைக்கு சென்று தலைமறைவாகிறார். பின் அங்கு அவர் இறந்ததாக செய்தி பரவுகிறது, ஒரு நாள் திடீரென்று இரவு காவல் ரோந்து நடக்கிறது அங்கு ஒரு A + ரவுடி சங்கு பாஸ்கர் சிக்குகிறார். அவர் மூலமாக சென்னையில் நடக்க போகும் மிக பெரிய ரவுடி ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியில் சென்னையில் உள்ள அணைத்து ரௌடிகளும் ஒன்று கூடுவதை அதர்வா அறிகிறார். இந்த பார்ட்டி படாளம் சேகர் தலைமையில் மும்பையை சேர்ந்த பிரபல ரவுடி சேட்டுவின் ஏற்பாட்டில் நடக்க திட்டமிடப்படுகிறது.
இதை அறிந்த அதர்வா ஒரு டீம் அமைத்து அனைவரையும் கைது செய்ய திட்டமிடுகிறார். இதற்கு சென்னை கமிஷனர் முழு ஆதரவு தருகிறார். சென்னை கமிஷனராக பாலிவுட் நடிகை தில்நாஸ் இராணி நடிப்பில் அசத்தல். இவரின் கணவராக கவுதம் வாசுதேவ் மேனன் IAS ஆக அவ்வப்போது வந்து போகிறார்.
இந்த தொடரில் முதல் 2 பாகம் அசத்தலாக போகிறது. 3ம் பாகத்தில் படத்தில் தேவை இல்லாமல் படாளம் சேகருக்கு ஒரு கதாநாயகியாக நடிகை டிடி அவருடன் காதல் என்று கொஞ்சம் திரைக்கதையில் சோர்வு அடைகிறது.
இந்த கதை 2018 ல் நடந்த சென்னையில் பரபரப்பாக பேசப்பட்ட ரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் மலையம்பாக்கத்தில் ரவுடிகள் கூடியது. அப்போது ரவுடிகளை போலீஸ் பிடித்தது எப்படி என்பது நாம் அனைவரும் அறிந்ததே! இதை தொடக்கமாக வைத்து தான் இயக்குனர் பிரசாத் முருகேசன் முழு கதையும் எழுதி உள்ளார் என்பது புரிகிறது.
அந்த சம்பவம் நடக்கிறதா? ரவுடிகள் கைது செய்யப்படுகிறார்களா இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள நாம் அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
படாளம் சேகர் என்ற ரவுடி கதாபாத்திரம் சென்னையின் எந்த ரௌடியை குறிக்கிறது?
படம் பார்த்தவர்கள் கமெண்ட் செய்யவும்!
டமாரம் ரேட்டிங் – 2.75/5
#Mathagam | #Damaaram | #Atharvaa | #Manikandan