சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகத்தினை ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோரை வைத்து எடுத்து இருக்கிறார் இயக்குனர் பி.வாசு. படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகளை படக்குழு செய்து வருகிறது..
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக சந்திரமுகி 2 ரிலீஸ் ஆக இருப்பதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரமுகி 2 படத்திற்கு MM கீரவாணி தான் இசையமைத்து வருகிறார். அவர் RRR படத்திற்காக ஆஸ்கார் வென்ற நிலையில் சந்திரமுகி 2 மீதும் தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது
இந்நிலையில் தான் சந்திரமுகி 2 முழு படத்தையும் பார்த்துவிட்டதாக கீரவாணி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
“சந்திரமுகி 2 பாத்தேன். இந்த படத்தின் கதாபாத்திரங்கள் மரணபயத்தில் படம் பார்க்கும் நபர் பல இரவுகள் தூங்காமல் இருப்பார்கள். நான் கடந்த 2 மாதங்களாக இரவு பகலாக தூங்காமல் படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறேன்” என கீரவாணி கூறி இருக்கிறார்.