தி ரோடு (The Road) – தமிழ்
நடிகர்கள்: த்ரிஷா, மியா ஜார்ஜ், ‘Dancing Rose’ ஷபீர், சந்தோஷ் பிரதீப், MS பாஸ்கர், வேல ராமமூர்த்தி மற்றும் விவேக் பிரசன்னா
இயக்குனர் : அருண் வசீகரன்
தயாரிப்பாளர் : ஜெய் சம்பத் மற்றும் சுப்பிரமணி தாஸ்
இசை : சாம் CS
படத்தின் நீளம் : 2 மணி 23 நிமிடங்கள்
நெடுஞ்சாலைகளில் நடக்கும் குற்றங்களை மிக தெளிவாக சுவாரஸ்யமாக சொல்லுகிறார் இயக்குனர் அருண்.
கதையின் நாயகியாக த்ரிஷா,(மீரா) கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப் (ஆனந்த்) க்கு மனைவியாக நடித்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் (கவின்) இந்த குடும்பம் மிகவும் சந்தோஷமானது.
ஒரு நாள் இவர்கள் ஒரு ட்ரிப் போகலாம் என்று முடிவு செய்து கிளம்ப அந்த ட்ரிப் மீராவின் குடும்பத்தை விபத்து மூலமாக காவு கொடுக்கிறது.
இந்த கதை தொடங்குவவுதே ஒரு தம்பதிகள் நெடுஞ்சாலையில் செல்லும் போது அவர்களுக்கு விபத்து ஏற்பட்டு அவர்கள் இறக்கிறார்கள். இந்த காட்சியை பார்த்த பின் படம் பார்க்கும் அனைவருக்குமே தெரிகிறது அடுத்து மீரா குடும்பம் விபத்தில் சிக்க போகிறது என்று.
தன் குடும்பத்தாரை இழந்த மீரா அது சாலை விபத்து இல்ல திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்பதை தெரிந்து கொள்கிறார்.
மீரா வின் தோழியாக வரும் அணு நடிகை மியா ஜார்ஜ் மற்றும் கான்ஸ்டபிள் சுப்ரமணியாக எம்.எஸ். பாஸ்கர் ) ஆகியோரின் உதவியுடன் தன் குடும்பத்தாரை கொன்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.
இந்த கதை ஒரு புறம் இருக்க, திரைக்கதை மதுரை பக்கம் செல்கிறது அங்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஷபீர் மீது ஒரு மாணவி பேராசிரியருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்க அவருக்கு அது அசிங்கமாகிறது.
இந்த இரு திரைக்கதைகளும் ஒரு கட்டத்துக்கு மேல் ஒன்றாகிறது. இந்த காட்சிகளை கையாண்ட விதம் முற்றிலும் பாராட்டுக்குரியது. இது இந்த படத்தின் இயக்குனர் டச் என்று சொல்லலாம். இதற்காகவே இயக்குனர் அருண் அவர்களுக்கு ஒரு பெரிய கைதட்டல்.
சாம் CS பின்னணி இசை படத்துக்கு மற்றும் ஒரு ப்ளஸ்.
ஒளிப்பதிவாளர் KG வெங்கடேஷுக்கு இந்த படம் ஒரு நல்ல பெயரை வாங்கி தரும்.
த்ரிஷாவுக்காக மக்கள் படத்துக்கு வந்தாலும் ஷபீர் தன் மிரட்டல் நடிப்பால் அனைவரையும் தன் பக்கம் கவனம் செலுத்தவைத்துவிட்டார்.
படத்தின் பின் நடக்கும் முக்கிய கதை ரசிகர்களுக்கு தெரிய வந்தபின் அந்த கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக எடுத்து சென்றிருக்கலாம் என்பதை ரசிகர்கள் கருத்து.
டமாரம் ரேட்டிங் – 3/5