சமையல் டிப்ஸ் 1
மீதமான பூரி அல்லது சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது மாவின் மேல் எண்ணெய் தடவி, காற்று புகாமல் மூடி வைத்தால் மாவு கலர் மாறாமல் அப்படியே இருக்கும்.
சமையல் டிப்ஸ் 2
பூரி செய்வதற்கு மாவு பிசையும் போது அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்தால், பூரி நீண்ட நேரம் அப்படியே உப்பலாக இருக்கும்.
சமையல் டிப்ஸ் 3
பால் பொங்கி கீழே வடியாமல் இருக்க, பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் ஒரு மரக்கரண்டியை வைத்தால் பால் பொங்கி வராது.
சமையல் டிப்ஸ் 4
தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.
சமையல் டிப்ஸ் 5
அரிசியில் பூச்சி வராமல் இருக்க, வர மிளகாய் அல்லது பிரியாணி இலை இதில் ஏதாவது ஒன்றை அரிசியில் போட்டு வைத்தால் பூச்சி வராது.