சமையல் டிப்ஸ் 6
பாதாமின் தோலை ஈசியாக உரிக்க, பாதாமில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி ஒரு நிமிடம் ஊற வைத்தால் பாதாமின் தோல் எளிதாக வரும்.
சமையல் டிப்ஸ் 7
வீட்டில் செய்யும் ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க ஊறுகாயில் சிறிதளவு குக்கிங் வினிகர் சேர்த்து கலந்து வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.
சமையல் டிப்ஸ் 8
தோசை பொன்னிறமாக வர, இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை உற்றினால் தோசை மொறு மொறுவகவும், பொன்னிறமாகவும் இருக்கும்.
சமையல் டிப்ஸ் 9
ஏலக்காயை பொடியாக அரைக்க ஏலக்காயுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பொடி செய்தால் ஏலக்காய் பொடியாக அரைத்து விடும்.